Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார், எம்.பரீட்)
19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி சம்பியனானது.
பாணந்துறை ஸ்ரீ சுமங்கல கல்லூரி மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதி போட்டியில் இரத்தினபுரி சென். அலூசியஸ் வித்தியாலயதத்தை வெற்றி கொண்டே கிண்ணியா மத்திய கல்லூரி சம்பியனானது.
மாகாண மட்ட சுற்றுப் போட்டியில் முதல் 3 இடங்களை பெற்ற 27 பாடசாலை அணிகள் நேற்று சனிக்கிழமையும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்ற இறுதி தொடரில் பங்குபற்றின.
இதன் இறுதிப்போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரியும் இரத்தினபுரி சென். அலூசியஸ் வித்தியாலயமும் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிண்ணியா மத்திய கல்லூரி அணியினர் நிர்ணயிக்கப்பட்ட எட்டு ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கட்டுக்களை இழந்து 70 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு துப்பெடுத்தாடிய இரத்தினபுரி சென். அலூசியஸ் வித்தியாலய அணியினர் 6.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 32 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.
இதன் மூலம் கிண்ணியா மத்திய கல்லூரி அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்று 2011ஆம் ஆண்டுக்கான சம்பியன் பட்டத்தை தமதாக்கிக் கொண்டது.
.
இதேவேளை, நாளை திங்கட்கிழமை காலை கிண்ணியாவை வந்தடையவுள்ள வெற்றி பெற்ற கிண்ணியா மத்திய கல்லூரி அணியினருக்கு கிண்ணியா பாலத்திலிருந்து பாரிய வரவேற்பினை வழங்குவதற்கா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
9 hours ago
nawas Monday, 19 September 2011 01:17 AM
மப்ரூக் மப்ரூக் , மாஷா அல்லாஹ்
Reply : 0 0
Alga Monday, 19 September 2011 03:33 AM
good to hear this news!
Reply : 0 0
lankan Tuesday, 20 September 2011 08:24 PM
அக்குரணை அஸார் கல்லுரி அண்டர் செவேண்டீன் கிரிக்கெட் அணி இறுதி ஆட்டத்துக்கு தெரிவாக உள்ளனர் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் ஹிந்துக்கல்லூரியுடன் நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் அஸார் கல்லுரி வெற்றி ஈட்டியதால் இறுதி ஆட்டதுக்கு தெரிவானதுஇவரும் வியாழக் கிழமை கொழும்பில் இறுதி ஆட்டம் இடம்பெறும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago