2021 ஒக்டோபர் 23, சனிக்கிழமை

ஊஞ்சல் கயிறு இறுகியதால் குடும்பஸ்தர் மரணம்

Editorial   / 2021 மே 15 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

வீட்டுக்கு அருகில் மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலின்  வயரில் கழுத்து இறுகியதில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான  ஏ. சஞ்ஜீவ சம்பத் என்ற 27 வயதான இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம்,  முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி வேலுசுமனபுர பிரதேசத்திலேயே இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.  

வீட்டுக்கு அருகிலுள்ள மரத்தில், அன்டனா வயரைக் கொண்டு, சாரியினால் ஊஞ்சலொன்று கட்டப்பட்டிருந்துள்ளது.

அந்த ஊஞ்சலில் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த போது ஊஞ்சல் கட்டப்பட்டிருந்த வயர் கழுத்தில் இறுகியே இந்நபர் இவ்வாறு உயிரிழந்துள்ளார் என  தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X