2025 ஜூலை 24, வியாழக்கிழமை

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 15 வயது சிறுமி மீது வல்லுறவு

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 03 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                     (கவிசுகி)

15 வயது பாடசாலைச் சிறுமி ஒருவருக்கு குளிர்ப்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை, யாழ். கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பாடசாலைச் சிறுமியைச் சந்தித்துள்ள சந்தேகநபர், அவருக்கு குளிர்பானம் அருந்தக் கொடுத்ததாகவும் அச்சிறுமி மயக்கமடைந்ததும் பாலடைந்த வீடு ஒன்றுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளதாகவும் சந்தேகநபருக்கு எதிராக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இணுவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் அதிரடி நடவடிக்கையின் போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன், கோப்பாய் பொலிஸார் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா உத்தரவிட்டார்.

  Comments - 0

  • அன்பாளன் Wednesday, 04 April 2012 12:11 AM

    பூனை இல்லாத வீட்டில் எலி விளையாடுகிறது.

    Reply : 0       0

    pasha Wednesday, 04 April 2012 02:16 PM

    பூனை இருந்திருந்தால் பூனை விளையாடி இருக்கும்

    Reply : 0       0

    ashraff Wednesday, 04 April 2012 02:43 PM

    உரிய வயதில் இளைஞர்கள் திருமணம் முடியாமை இதற்கு பிராதான காரணமாகும். வேலையில்லாப் பிரச்சினை சீதன அல்லது வரதட்சனை சாதி, அந்தஸ்து பார்த்தல் போன்றன இவர்களை உரிய வயதில் திருமணம செய்யும் நிலையை தடை செய்யும் பிரதான காரணிகள் எனலாம். சமூகத் தலைவர்கள் இது குறித்து சிந்தத்து ஆவன செய்வது அவசியமாகும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .