2025 ஜூலை 24, வியாழக்கிழமை

வவுனியா நகர பிச்சைக்காரர்கள் கைது

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 03 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


வவுனியா நகர்ப்பகுதியில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த 16 பிச்சைக்காரர்களைக் கைது செய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு காரணங்களை கூறி வவுனியா நகர்ப்பகுதியில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிச்சை எடுத்தார்கள் என்ற காரணத்தினாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர்கள், வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .