2025 ஜூலை 23, புதன்கிழமை

வெளிநாட்டுப் பிரஜையை கடத்தி கப்பம் கோரும் முயற்சி முறியடிப்பு

Super User   / 2012 ஏப்ரல் 28 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆபிரிக்க நாடான கினியாவைச் சேர்ந்த ஒருவரை கடத்தி கப்பம் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைளை கல்கிஸை பொலிஸார் இன்று முறியடித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்டவரை விடுவிப்பதற்கு 20 லட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கினியா பிரஜையின் நண்பரான நைஜீரிய பிரஜையொருவர் உள்ளூர்வாசியொருவருக்கு 20 லட்சம் ரூபா கொடுக்க வேண்டியிருந்ததாகவும் அவர் அப்பணத்தை திருப்பிக்கொடுக்காத நிலையில் கினியா பிரஜையை குழுவொன்றுடன் இணைந்து உள்ளூர்வாசி  கடத்தி, பணத்தை தருமாறு கோரியதாகவும் பொலிஸார் கூறினர். (எஸ்.டி.)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .