Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த மூன்றாவது சீஸனில் தர்ஷன், பிக்பாஸ் டைட்டில் கைப்பற்ற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெற்றி பெறும் முன்னரே தர்ஷனுக்கு இன்று பிக்பாஸ் வீட்டில் முடிசூட்டும் விழா நடைபெறுகிறது. ஆம் இன்று பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு மன்னர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது
மன்னர் தர்ஷனுக்கு தேவையான அனைத்துப் பணிவிடைகளையும் லொஸ்லியா மற்றும் முகின் செய்ய வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து இருவரும் பணிவிடைகளை செய்கின்றனர். மேலும் மன்னரின் பெருமைகளை சாண்டி அறிவிக்க வேண்டுமென குறிப்பு தரப்பட, உடனே சாண்டி, ‘ராஜாதி ராஜ ராஜ கம்பீர ராஜ குலோத்துங்க’ என்று மன்னரின் பெருமைகளை எடுத்து கூறுகிறார்
அதேபோல் கவின் மட்டும் ஷெரின், மன்னர் தூரதேசம் செல்லும் போது அவரை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று குறிப்பிட, இருவரும் தர்ஷனை தூக்கிக் கொண்டு செல்கின்றனர்.
காமெடியாக இருக்கும் இந்த டாஸ்க் போட்டியாளர்கள் மட்டுமன்றி பார்வையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் போட்டியாளர்கள் இந்த டாஸ்க்கில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் யாஷிகா ஆனந்த் மற்றும் மகத் ஆகியோர் இந்த டாஸ்க் ரசித்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .