Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 பெப்ரவரி 10 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் அஜித்குமார் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.
விடாமுயற்சி, குட் பேட் அக்லி திரைப்படங்களுக்கு நடுவே நடிகர் அஜித்குமார் வீனஸ் மோட்டர்ஸ் டூர்ஸ் என்கிற தன் இருசக்கர பயண நிறுவனத்தை ஆரம்பித்தார்.
இருசக்கர வாகனத்தில் தொலைத்தூரப் பயணங்களைத் திட்டமிடுபவர்களுக்கான தளமாக இது செயல்பட்டுவருகிறது.
இதைத் தொடர்ந்து 'அஜித் குமார் ரேஸிங்' என்கிற கார் பந்தயத்திற்காக சர்வதேச அளவிலான வீரர்களை ரேஸிங்கில் ஈடுபட வைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்.
அண்மையில், டுபையில் நடைபெற்ற கார் பந்தயத்தில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தினார்.
தற்போது, ஸ்பெயினின் பார்சிலோனா கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக அங்கு தன் குழுவினருடன் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய அஜித், “எங்களுக்கு மற்றுமொரு நல்ல நேரம் அமைந்துள்ளது. இங்கு பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கினேன்.
ஆனால், அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து நடந்ததும் குழுவினர் விரைவாக செயல்பட்டு மீட்டனர். தற்போது, மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.
முன்னதாக, துபையில் பயிற்சியின்போது அஜித்தின் கார் விபத்தில் சிக்கி நொறுங்கியது குறிப்பிடத்தக்கது. (S.R)
12 minute ago
16 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
2 hours ago