George / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்த நடிகை ராதிகா ஆப்தே, அண்மையில்; ''Parched'' என்ற படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார் என்றும் அதுகுறித்து ஒருசில காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்த நிர்வாண காட்சிகள் அடங்கிய டிவிடிக்கள் தற்போது கொல்கத்தா மார்க்கெட்டில் இந்திய ரூ.90க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் அஜய்தேவ்கான், சைபர் க்ரைம் பொலிஸாரிடம் புகார் செய்துள்ளதாகவும் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படம் இம்மாதம் 23ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியீட்டுக்கு முன்பே இந்தத் திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
9 minute ago
17 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
19 minute ago