2025 மே 19, திங்கட்கிழமை

தொப்புளுக்காக நீதி கேட்கும் நஸ்ரியா

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


நேரம் நல்லாருந்தா எருமை கூட ஏரோப்ளேன் கேட்கும் என்பது போலாகிவிட்டது கதாநாயகிகளின் கதை. நேரம் திரைப்படத்தில் அறிமுகமாகி, இன்று அத்தனை இளம் ஹீரோக்களும் கேட்கும் நடிகையாகிவிட்ட நஸ்ரியா, இயக்குநர் சற்குணம் மீது நடிகர் சங்கத்தில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.
 
'நய்யாண்டி' திரைப்படத்தில் தனது இடுப்பை அனுமதியின்றி படமாக்கிவிட்டதாக தன் முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார். தனு{ஸுக்கு ஜோடியாக நய்யாண்டி திரைப்படத்தில் நடித்து வருகிறார் நஸ்ரியா.

இந்த திரைப்படத்தை களவாணி, வாகை சூடவா புகழ் சற்குணம் இயக்குகிறார். விரைவில் இந்த திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் சற்குணம் மீது நடிகர் சங்கத்தில் பரபரப்பாக முறைப்பாடு செய்துள்ளார் நஸ்ரியா.

திரைப்படத்தில் நஸ்ரியாவின் இடுப்பும் தொப்புளும் பளிச்சென்று தெரியும் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளதாம். இந்தக் காட்சியில் நடிக்கக் கேட்டபோது மறுத்துவிட்டாராம் நஸ்ரியா. எனவே நஸ்ரியாவுக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணின் தொப்புளை படமாக்கி, அதை நஸ்ரியா தலையுடன் சேர்த்து விட்டாராம் இயக்குநர்.

தனது அனுமதி இன்றி வேறு ஒரு பெண்ணை வைத்து படமாக்கி அதை தனது முகத்துடன் இணைத்து படத்தின் போஸ்டர்களில் வெளியிட்டு தன்னை தவறாக சித்தரித்துவிட்டனர் என கண்ணீருடன் புகார் செய்துள்ளார் நஸ்ரியா.

நையாண்டி திரைப்படத்தில் தொப்புளுக்கு டூப் போட்ட விவகாரத்தில் தனக்கு படத்தின் ஹீரோ தனுஷின் ஆதரவு உள்ளதாகவும் கூறியுள்ளார் நடிகை நஸ்ரியா. எது எதெற்கோ டூப் போடும் தமிழ் சினிமாவில் தொப்புளுக்கு டூப் போட்ட விவகாரம் சூட்டைக் கிளப்பியுள்ளது.

ஏற்கனவே ஹொட் நாயகியாக பார்க்கப்படும் நஸ்ரியா, ராஜா ராணி ஹிட் ஆகியுள்ளதால் சூப்பர் ஹிட் நாயகியாகியுள்ளார். தற்போது நய்யாண்டி தவிர எட்டுப் படங்கள் கையில் இருப்பதாக கூறுகிறார் நஸ்ரியா. இந்த நிலையில் அவரது தொப்புள் விவகாரம் வெடித்துள்ளது கோலிவூட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








You May Also Like

  Comments - 0

  • ilaahi Tuesday, 08 October 2013 10:45 AM

    தொப்புல் மட்டும் ஹராமா நஸ்ரி கை,கால் ஹராம் இல்லையா மா...

    Reply : 0       0

    ilaahi Tuesday, 08 October 2013 10:49 AM

    தொப்புல் மட்டும் ஹராமா நஸ்ரி கை,கால் ஹராம் இல்லையா மா...! தலையில் இருக்கிற முடி என்னமோ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X