Janu / 2023 ஜூன் 05 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2010-ல் வெளியான எந்திரன் படம் பெரிய வெற்றி பெற்றது. இதில் வசீகரன், சிட்டி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். தொடர்ந்து எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது. இந்த படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து.
இந்த நிலையில் ரஜினியை வைத்து எந்திரன் படத்தின் மூன்றாம் பாகத்தை 3.0 என்ற பெயரில் படமாக்க ஷங்கர் ஆலோசித்து வருவதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்றும் அது ரஜினிக்கு கடைசி படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது எந்திரன் 3-ம் பாகத்திலும் அவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதற்கான திரைக்கதையை ஷங்கர் தயார் செய்து வருவதாகவும் பேசுகின்றனர். எந்திரன் 3-ம் பாகம் உருவாக வேண்டும் என்று ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனாலும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

9 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Nov 2025