Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா - தொழிலதிபர் விசாகன் திருமணம், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெகு விமரிசையாக நடந்தது. அரசியல் பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
ஆனால், ரசௌந்தர்யாவின் குடும்பத்தினர், கண்ணீர் மல்க, தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். காரணம், சௌந்தர்யாவுக்கு இது, மறுமணமாகும். முதல் திருமணத்தில் தோற்றிருந்த சௌந்தர்யாவுக்கு, மீண்டும் அவரது வாழ்க்கை கிடைத்துள்ளதை எண்ணி, தந்தை ரஜினிகாந்த், தாய் லதா, சகோதரி ஐஸ்வர்யா ஆகியோர், கண்ணீருடன் சௌந்தர்யாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
இது இவ்வாறிருக்க, திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி, ரஜினிகாந்த், தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மகள் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்ராதா கிருஷ்ணன், திருநாவுக்கரசர், அமர்நாத், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, கமல்ஹாசன், குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், திரை உலக பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், காவற்றுறை நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago