2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

டுவிற் எழுத்து எல்லையை அதிகரிக்கவுள்ள டுவிற்றர்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 06 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

விரைவில் நீண்ட டுவிற்கள் வரப்போகின்றன. ஆம், டுவிற்றரானது, தனது பயனர்கள் டுவிற் செய்யும் எழுதுக்களின் எல்லையை 10,000 அளவுக்கு அனுமதிக்கும் வசதியை டுவிற்றர் தயார் செய்து வருவதாக, கடந்த செவ்வாய்க்கிழமை (05), தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, வழமையாக தற்போது டுவிற் ஒன்றுக்கு காணப்படும் 140 எல்லையை விட மிக அதிகமாகும்.

இந்த, டுவிற் ஒன்றின் எல்லையை 10,000 ஆக அதிகரிப்பதன் மூலம் சொற்கள் மற்றும் நிறுத்தற்குறிகளுக்கிடையிலான இடைவெளிகள் உள்ளடங்கலாக ஆயிரத்துக்கு மேற்பட்ட சொற்களை டுவிற் ஒன்றில் பதிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டுவிற்றரானது, மேற்படிச் சேவையை, இவ்வருடத்தின், முதலாவது காலாண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டபோதும், எப்போது இந்தச் சேவை அமுலுக்கு வருமென்பது குறித்து உத்தியோகபூர்வ திகதி குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் டுவிற்றரின் இணை நிறுவுநரும் கடந்த ஒக்டோபரில் பிரதம நிறைவேற்றதிகாரி பதவிக்குத் திரும்பியவருமான ஜக் டோர்சி, டுவிற்றர், டுவிற் ஒன்றிற்கான எல்லையை அதிகரிக்குமா என்று தெரிவிக்காத போதும், இது ஒரு அழகான எல்லை என்று தெரிவித்துள்ளார்.

எனினும் மேற்படிச் செய்தி வெளியானபோது, டுவிற் ஒன்றிற்கான எல்லையை 140இலிருந்து அதிகரிப்பதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, #beyond140 என்ற ஹாஷ்டக்கில் பயனர்கள் டுவிற்களை பதிந்திருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .