Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 ஜூலை 07 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவம் எதிர்வரும் 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருக்கின்றது.
அது தொடர்பான பூர்வாங்க பஞ்சாயத்துசபைக்கூட்டம் ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் ஆலய முன்றலில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
அதேவேளை திருக்கோவில் பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன் முன்னிலையில் நடைபெறும் அனுசரணைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன. அதில் கொவிட் சுகாதார வழிமுறை தீர்மானங்கள் எடுக்கப்படவிருக்கின்றன.
இந்தவருடத்திற்கான ஆடிஅமாவாசை உற்சவம் ஜூலை மாதம் 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.
மறுநாள் பூங்காவனத்திருவிழா தொடர்நது மறுநாள் வயிரவர் பபூஜையுடன் நிறைவடையவுள்ளது. ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில் ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநதாதக்குருக்கள் தலைமையில் உற்சவம் நடைபெறவுள்ளது.
அனுசரணைக்கூட்டத்தின் பின்னர் உற்சவத்திற்கான உபயகாரர்கள் முதல் சகல செயற்பாடுகளுக்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டவுள்ளன. (வைப்பக படங்களும் தகவலும் வி.ரி.சகாதேவராஜா)
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago