Super User / 2012 ஜூலை 12 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

1878: ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்திலிருந்து சேர்பியா மொன்டெனெக்ரோ, ருமேனியா முழுமையாக சுதந்திரம் பெற்றன.
1919: பிரித்தானிய வாயுக்கப்பலொன்று பிரிட்டனிலிருந்து அத்திலாந்திக் சமுத்திரத்தை கடந்து சென்று மீண்டும் பிரிட்டனில் தரையிறங்கியது. முதல்தடவையாக இத்தகைய இருவழிப் பயணம் நடைபெற்றது.
1923: 'ஹொலிவூட்' சமிக்ஞை உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.
1973: அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழலில் உரையாடல் பதிவுகள் அடங்கிய ஒலிநாடா இருப்பது குறித்து செனட் விசாரணைக் குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.
1985: அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றீகனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் உப ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ் ஒருநாள் பதில் ஜனாதிபதியாக கடமையாற்றினார்.
1990: ஆப்கானிஸ்தானில் 'லெனின் சிகரத்தில்' ஏறிக்கொண்டிருந்த மலையேறிகள் 43 பேர், பூகம்பமொன்றையடுத்து,ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .