Menaka Mookandi / 2015 ஜூன் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
363: ரோம சக்கவர்த்தி ஜூலியன் கொல்லப்பட்டார்.
1870: அமெரிக்காவில் நத்தார் தினம் சமஷ்டி விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
1917: முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிராக பிரான்ஸ், பிரிட்டனுடன் இணைந்து போரிடுவதற்காக முதலாவது அமெரிக்க படை பிரான்ஸை வந்தடைந்தது.
1945: ஐ.நா. சாசனம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் கையெழுத்திடப்பட்டது.
1948: மேற்கு பேர்லினுக்கான தரைவிநியோகப் பாதையை சோவியத் யூனியன் துண்டித்ததால் விமானம் மூலமான விநியோகங்களை மேற்கு நாடுகள் ஆரம்பித்தன.
1960: பிரான்ஸிடமிருந்து மடகஸ்கார் சுதந்திரம்பெற்றது.
1995: கட்டார் அமீரான, கலீபா பின் ஹமட் அல் தானியை அவரின் மகன் ஹமட் பின் கலீபா அல் தானி இரத்தமில்லா புரட்சிமூலம் நீக்கிவிட்டு தான் அமீரானார்.
2000: முழு மனிதனுக்கான மரபணுப் பரிசோதனையின் முதல் ஆய்வு முடிவடைந்ததாக அமெரிக்கா அறிவிப்பு.
2007: உலகின் மிக நீளமான கடல் பாலத்தை சீனா, கட்டிமுடித்தது.
2013: ஒரே பாலின திருமணங்களுக்கு அமெரிக்காவின் திருமணச் சட்டப் பாதுகாப்பு (டோமா) பாரபட்சம் காட்டுவதாக அந்நாட்டு உயர்நீதிமன்றம் அறிவிப்பு.
2013: சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் நடந்த கலவரத்தில் 36 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 21பேர் காயமடைந்தனர்.
2013: அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்டமூலத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago