2025 மே 19, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூலை 01

Menaka Mookandi   / 2015 ஜூன் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1881: முதலாவது சர்வதேச தொலைபேசி அழைப்பு அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டது.

1908: எஸ்.ஓ.எஸ். (SOS ) என்பது சர்வதேச அவசரநிலை சமிக்ஞையாக அங்கீகரிக்கப்பட்டது.

1921: சீன கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.
1948: பாகிஸ்தான் மக்கள் வங்கி ஸ்தாபிக்கப்பட்டது.

1949: இந்தியாவில் 1000 வருடங்களாக கொச்சி அரச குடும்பத்தினால் ஆளப்பட்டு வந்த கொச்சின், திருவாங்கூர் சமஸ்தானங்கள் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டது.

1960, சோமாலியா சுதந்திரம் பெற்றது.

1960: கானா குடியரசாகியது.

1962: ருவாண்டா, புரூண்டி சுதந்திரம் பெற்றன.

1968: அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தத்தல் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கையெழுத்திட்டன.

1979: வாக்மேன் கருவியை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

1991: வார்ஸோ ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக ரத்துச் செய்யப்பட்டது.

1997: ஹொங்கொங்கின் இறையாண்மையை மீண்டும் சீனாவிடம் பிரிட்டன் கையளித்தது.

2002: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.

2002: தெற்கு ஜெர்மனியில் இரண்டு விமானங்கள் வானில் மோதியதில் 71பேர் கொல்லப்பட்டனர்.

2004: காசினி-ஹியூஜென்ஸ் விண்கலம் சனிக்கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.

2006: கொழும்பில் சுதந்திர ஊடகவியலாளர் சம்பத் லக்மால் சில்வா இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டார்.

2013: நெப்டியூனின் துணைகோளான எஸ்/2004 N1 கண்டுபிடிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X