Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2023 நவம்பர் 29 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, நவ.29 (தமிழ் மிரர்) - அடுத்த வருடம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து உள்ளார்.
அநுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மகா போதிக்கு விஜயம் செய்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறி உள்ளார்.
இதேவேளை, தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்கு வைத்து ஜனவரி முதல் கிராமிய மட்டத்திலான தேர்தல் பிரசார நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய சம்மேளனம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடக்கவுள்ளது.
இந்த சம்மேளனத்தின் போது, கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
10 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago