2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயம் திறப்பு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ், பாறுக் ஷிஹான்

ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனைத் தொகுதிக்கான பிரதம காரியாலய திறப்பு விழா,  அம்பாறை கரையோர பிரதேச அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றஸாக்கின் தலைமையில் கல்முனையில் நேற்று (16) இரவு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப், நல்லாட்ச்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் பொறியலாளர் அப்துல் ரஹ்மான், ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .