2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஐஸ் போதைப்பொருளுடன் குடும்பஸ்தர் கைது

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

ஐஸ் போதைப்பொருளை  தம்வசம் வைத்திருந்த சந்தேகநபரை, கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை - கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, நேற்றிரவு (23) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில், காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா வீதி அலியார் சந்தியில் வைத்து  சந்தேகநபர் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் 37 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன், சந்தேகநபர் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 5 கிராம் 10 மில்லிகிராம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .