Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்ஜுன் லாபீர், றாசிக் நபாயிஸ், எம்.என்.எம் அப்ராஸ், பி.எம்.எம்.ஏ.காதர்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், அம்பாறை மாவட்டச் செயலகத்தின் வழிகாட்டலில், கல்முனை பிரதேச செயலகம் நடத்திய "கலைஞர் சுவதம்" விருது வழங்கும் நிகழ்வு, பிரதேச செயலகக் கூட்டம் மண்டபத்தில் இன்று (24) நடைபெற்றது.
இந்நிகழ்வு, கலாசார உத்தியோகத்தர் திருமதி எம்.எச்.பெளசுல் ஹிபானாவின் நெறிப்படுத்தலில், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்றது.
கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கலைஞர்கள் உள்ளடங்களாக ஆண்கள்-06, பெண்கள்-04 என 10 கலைஞர்களுக்கு "கலைஞர் சுவதம்" விருதுகள் இதன்போது வழங்கப்பட்டதுடன், சுகாதார முறைப்படி சமூக இடைவெளி பேணி நிகழ்வு நடத்தப்பட்டது.
மருதமுனை எம்.ரி.முகம்மது நெளபல், நற்பிட்டிமுனை ஏ.எம்.கஸ்பியா வீவீ, மருதமுனை எம்.ஜ.கைறுன்னிஸா ஆகியோர் கவிதை, கட்டுரை மற்றும் சிறுகதைக்காகவும் மருதமுனை எம்.எச்.ஏ.கரீம், கல்முனைக்குடி எம்.எஸ்.பிஸ்மின் கவிதை மற்றும் பாடலாக்கத்துக்கும் கல்முனைக்குடி எஸ்.தஸ்தகீர் கவிதை மற்றும் கட்டுரைக்காகவும் தெரிவாகியிருந்தனர்.
நற்பிட்டிமுனை எம்.கே.சம்சுன்னுசா கவி பாடுதலுக்கும் கல்முனைக்குடி ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் ஆய்வுக் கட்டுரைக்காகவும் மருதமுனை ஏ.எச்.ஏ.ழாஹிர் கவிதைக்காகவும் கல்முனைக்குடி எம்.வை.எம்.றஜாகாதர் பொல்லடி அண்ணாவியார் ஆகிய துறைகளுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன், கெளரவ அதிதியாக அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.றிம்ஸான் பிரதேச செயலாளர் மற்றும் கலாசார தலைவர் எம்.எம்.நஸீர் ஆகியோர்களால் விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸான், நிர்வாக கிராம உத்தியோகத்தர் யூ.எல்.பதியுத்தீன், பிரதேச கலாசார அமைப்பின் செயலாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ், பொருளாளர் ஏ.ஆர்.எம்.சாலி, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஜனாபா எஸ்.எல்.எம்.நெளபல் ஆகியோர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago