Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கல்முனை பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர் பிரிவில் அக்கரைப்பற்று, காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் கல்முனைத் தெற்கு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள் இறுக்கமான சுகாதார நடைடுறைகளை கடைப்பிடிக்குமாறும், கல்முனை பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி டொக்டர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 351 பேரும், காரைதீவு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 88 பேரும், சாய்ந்தமருது சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 97 பேரும், கல்முனை தெற்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 339 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கல்முனை பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர் பிரிவில் மொத்தம் 1,378 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்கானப்பட்டுள்ளனர் எனவும் கல்முனைப் பிராந்தியத்தில் 27,579 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாளாந்தம் கொரோனாத் தொற்றாளர்களின் சதவீதம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அதிகாரிகளால் அவ்வப்போது அறிவிக்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்குமாறும், பொதுமக்களை கேட்டுள்ளார்.
14 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago