2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

புதிய கட்சிக்கு ஆயத்தம்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

கடந்த பொதுத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் சுயேச்சை குழு -2 என்கிற பெயரில் போட்டியிட்ட அரசியல் புரட்சிகர முன்னணி, தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்கதற்காக விண்ணப்பித்துள்ளதாக, அதன் செயலாளர் நாயகம் சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவாவை, இன்று (22) தெரிவித்தார்.

இதற்கான விண்ணப்பத்தை, ராஜகிரியவில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் சட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவித் தேர்தல் ஆணையாளர் குலதுங்கவிடம் கையளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்சியின் யாப்பு, கடந்த 05 வருடங்களுக்கு உரிய செயற்பாடுகள் அடங்கிய கோவை ஆகியன அடங்கிய 28 பக்க ஆவணங்கள்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இக்கட்சிக்கு சீப்பு சின்னத்தை வழங்குமாறு கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .