Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
அம்பாறை, வளத்தாப்பிட்டியில் வயல் காவலுக்கு நின்றிருந்த 42 வயது இளம்குடும்பஸ்தரான விவசாயி மயில்வாகனம் யோகராசா என்பவர், நேற்று (22) இரவு யானையால் தாக்கப்பட்டு மரணித்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவருடன் இன்னும் பலர் வேறு வேறு இடங்களில் காவலில் ஈடுபட்டுள்ளனர். வேளாண்மை அறுவடைக் காலமென்பதால் விவசாயக் குழுவால் காவலுக்கென இவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று 8 மணியளவில் வந்த தனியன் யானையை விரட்ட எடுத்த முயற்சியில் யானையால் தாக்கப்பட்டு இவர் மரணித்துள்ளார்.
ஏனையோர் மற்றுமொரு யானைக்கூட்டத்தை விரட்டிச் சென்றிருக்கும் போது இச்சம்வம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago