Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2023 செப்டெம்பர் 26 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது வங்கி கணக்குக்கு ரூ.9 ஆயிரம் கோடி எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கார் ஓட்டுநர் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமார் (28), பழனியில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் சேமிப்பு கணக்கை வைத்துள்ளார். கடந்த 9-ம் திகதி அவரது சேமிப்பு கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டது. பின்னர், அந்த தொகை அவரது கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது.
இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கார் ஓட்டுநர் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: எனது வங்கி சேமிப்பு கணக்கில் ரூ.9,000 கோடி மற்றும் ரூ.11,000 வரவு வைக்கப்பட்டு எடுக்கப்பட்டது தொடர்பாக வங்கி தரப்பில் உரிய விளக்கம் அளிக்கவில்லை.
எனது கணக்கில் போடப்பட்டது யாருடைய பணம் என்பது தெரியாது. ரூ.9,000 கோடி யாருடையது என்று கேட்டதற்கு பதில் அளிக்கவில்லை. தவறுதலாக வரவு வைக்கப்பட்டதாக வங்கி தரப்பில் கூறுகின்றனர். அது ஏற்புடையதாக இல்லை. எனவே, அது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago