Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூலை 31 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத், குஷாய் குடாவை சேர்ந்தவர் ரமேஷ். கார் டிரைவர். இவரது மனைவி கல்யாணி (வயது 22). இவர்கள் 2018-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
தம்பதிக்கு தன்விதா என்ற 4 வயது பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந் நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். கல்யாணி செங்கன் மாவட்டத்தில் உள்ள தனது பெற்றோர் ஊரில் நடைபெறும் திருவிழாவிற்காக சென்றபோது அதே ஊரை சேர்ந்த நவீன் குமார் (19) என்ற வாலிபருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் தாய் வீட்டிற்கு சென்று நவீன் குமாருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இவர்களது தகாத உறவுக்கு மகள் இருப்பதாக இருவரும் எண்ணியதால். மகளை கொலை செய்ய முடிவு செய்து. வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த சிறுமியின் கழுத்தை நெரித்து தாய் கொலை செய்துள்ளார். பின்னர் உடல் நிலை சரியில்லாததால் மகள் இறந்து விட்டதாக அங்குள்ளவர்களிடம் கூறியுள்ளார்.
மகளின் மரணத்தில் சந்தேகம் அடைந்த தந்தை இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து. பொலிஸார் கல்யாணியை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மகளை கொலை செய்ததாக கல்யாணி வாக்குமூலம் அளித்தார். பொலிஸார் வழக்கு பதிவு செய்து கல்யாணியை கைது செய்தனர்.
19 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
27 minute ago
2 hours ago