Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 ஏப்ரல் 03 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் இன்று (03) அதிகாலை தையல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டானா பஜாரிலுள்ள தையல் கடையில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென ஏற்ப்பட்ட தீ பரவலில் மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள், இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து பொலிஸ் ஆணையர் ஒருவர் தெரிவிக்கையில்: சத்ரபதி சம்பாஜிநகர் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் கீழ் தளத்தில் தையல் கடை மற்றும் பிற வணிக நிறுவனங்களும், மேல் தளத்தில் ஒரு குடும்பத்தினரும் வசித்து வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை தையல் கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து 4.15 மணியளவில் பொலிஸாருக்கு தகவல் தெரிய வந்தது. அவர்கள் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஏற்பட்ட புகையால் 7 பேர் மூச்சுத்திணறி பலியாகியுள்ளனர்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago