Mithuna / 2023 டிசெம்பர் 10 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’, உலகளாவிய தலைவர்களின் பிரபலம் குறித்த மதிப்பாய்வு நடத்தியது. அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘உலகளவில் பிரபலமான தலைவர் என்ற பட்டியலில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு 76% அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதற்கு அடுத்த இடத்தில் மெக்சிகோவின் ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோருக்கு 66 சதவீதம், மூன்றாவது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் பிரதமர் அலைன் பெர்செட்டுக்கு 58 சதவீதம் பெற்றுள்ளனர்.
பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா நான்காவது இடம், ஆவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். ஆறாவது இடத்தில் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் முதல் ஐந்து இடங்களுக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago