A.K.M. Ramzy / 2021 மே 23 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராய்ப்பூர்
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊரடங்கு சமயத்தில் மருந்து வாங்க வந்த நபரை சூரஜ்பூர் மாவட்ட ஆளுனரும் பொலிஸாரும் இணைந்தது தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருந்துக் கடைக்குச் சென்ற வாலிபரின் வாகனத்தை பொலிஸார் மறித்து விசாரித்தபோது, வாகனத்தின் ஆவணங்களை காட்டினார். அப்போது மாவட்ட ஆளுனர் ரன்பீர் சர்மா, வாலிபரின் அலைபேசியை பறித்து, கீழே போட்டு காலினால் உடைத்தார். பிறகு அவரை கன்னத்திலும் அறைந்தார்.
இதையடுத்து அங்கிருந்த பொலிஸாரும் வாலிபரை தாக்கியுள்ளனர். இந்த காட்சியை ஒருவர் அலைபேசியில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. பலரும் ஆளுனருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து தனது செயலுக்காக மாவட்ட ஆளுனர் மன்னிப்பு கோரியுள்ளார். அந்த வாலிபர் தவறாக நடந்துகொண்டதால் அறைந்ததாக கூறி உள்ளார். எனினும், ஆளுனரின் அத்துமீறிய செயலுக்காக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
46 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
50 minute ago
2 hours ago