Editorial / 2026 ஏப்ரல் 05 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட பின்னர் காணாமல் போன அமெரிக்க விமானப்படையின் F-15E போர் விமானத்தின் ஆயுத அதிகாரி (Weapons Officer) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது 'Truth Social' சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
“நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்! என் சக அமெரிக்கர்களே, கடந்த சில மணி நேரங்களில் அமெரிக்க இராணுவம் தனது வரலாற்றில் மிகத் துணிச்சலான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையொன்றை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
எமது விமானப்படையின் மிகச்சிறந்த குழு உறுப்பினர்களில் ஒருவரும், மிகவும் மதிப்புமிக்க கேர்ணல் (Colonel) அந்தஸ்து உடையவருமான அந்த அதிகாரி தற்போது முழுமையான பாதுகாப்புடனும் நலமுடனும் உள்ளார் என்பதை உங்களிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago