Freelancer / 2026 ஏப்ரல் 16 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் மீதான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக ஜனநாயகக் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் தோல்வியடைந்தது.
ஈரானுக்கு எதிரான போரை நிறுத்தக் கோரி கொண்டுவரப்பட்ட இந்த 'போர் அதிகாரத் தீர்மானம்' 52-47 என்ற வாக்கு கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.
இதன் மூலம், ஈரான் மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கி ஆறு வாரங்கள் கடந்த நிலையிலும், ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு அவரது குடியரசுக் கட்சிக்குள் பலமான ஆதரவு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ராண்ட் போல் மட்டுமே கட்சி மாறி இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜோன் ஃபெட்டர்மேன் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த ஒரே ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஆவார்.
சமீபத்திய ரொய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பின்படி, 60 வீத அமெரிக்கர்கள் ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை எதிர்க்கின்றனர்.
இருப்பினும், குடியரசுக் கட்சியினரில் 74வீதமானோர் அதற்கு ஆதரவளிப்பதாகவும், ஜனநாயகக் கட்சியினரில் 7வீதமானோர்; மட்டுமே ஆதரிப்பதாகவும் தெரியவந்துள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .