2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

யங் ஒலிம்பிக்ஸ் சம்பியன் பட்டத்தை வென்றது

Super User   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்
                                        மூதூர் வெஸ்ரர்ன் வொரியர்ஸ்

திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய டுவென்டி 20 சுற்றுபப்போட்டியில் யங் ஒலிம்பிக்ஸ் அணியினர் சம்பியன் பட்டத்தை வென்றனர்.

18 கழகஅணிகள் இதில் பங்கு கொண்டிருந்தன.

இறுதிப்போட்டி ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்றது. இதில் மூதூர் வெஸ்ரன் வொரியர்ஸ் கழகத்தை எதிர்த்து யங் ஒலிம்பிக்ஸ் கழகம் மோதியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வெஸ்ரர்ன் வொரியஸ் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.  நிர்ணயிக்கப்பட்ட பந்து பரிமாற்றங்களில் சகல இழக்குகளையும் இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு கழமிறங்கிய யங்ஒலிம்பிக்ஸ் கழகத்தினர் 16.4 பந்து பரிமாற்றங்களில் 9 இழக்குகள் இழப்பிற்கு 131 ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றது. லிரோன்ஸ் 43 பந்துகளைச் சந்தித்து 75 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். போட்டி ஆட்டநாயகனாகவும் இவர் தெரிவு செய்யப்பட்டார்.


                                                                 யங்ஒலிம்பிக்ஸ்



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X