Janu / 2026 ஜனவரி 08 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரைப்பற்று கல்வி வலய பதுரியா வித்தியாலய அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் வியாழக்கிழமை (08) அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலை மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் மொத்த அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வந்த அதிபரை தொடர்ந்து பணியாற்றும் நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் இடமாற்றம் செய்யப்பட்ட புதிய அதிபர் பாடசாலைக்கு வரக்கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள், கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராக பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மேலும், தற்போதைய அதிபரின் தலைமையில் பாடசாலையின் கல்வி தரம் உயர்ந்துள்ளதாகவும், மாணவர் ஒழுக்கம் மற்றும் கூடுதல் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக உரிய அதிகாரிகள் தலையிட்டு மாணவர்களின் நலனை முதன்மைப்படுத்தி உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
அபு அலா

2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago