2025 மே 03, சனிக்கிழமை

7 ஆண்களும் 2 பெண்களும் மரணம் ; மொத்தம் 696 ஆக கூடியது.

Editorial   / 2021 மே 03 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 தொற்றால் கடந்த 2ஆம் திகதியன்று ஒன்பது பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளதுள்ளார். அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட்- 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 696 ஆகும்

01. கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 94 வயதுடைய ஆண் ஒருவர், கெப்பித்திகொல்லாவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 ஏப்ரல் 29 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொறற் hல் ஏறப் ட்ட தீவிர நியூமோனியா  நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

02. பொலன்னறுவை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 51 வயதுடைய ஆண் ஒருவர் வெலிகந்த சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 01 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். நாட்பட்ட சிறுநீரக நோய் மற்றும் கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

03. லெவ்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய ஆண் ஒருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 01 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார்.  கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

04. தென்னகும்புர பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 79 வயதுடைய பெண் ஒருவர் பெனிதெனிய சிகிச்சை நிலையத்தில் இருந்து பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 02 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 05. மத்தேகொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 86 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கணட் றியப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு  அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 02 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, உயர் குருதியழுத்தம், நீரிழிவு, மூச்சிழுப்பு மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

06. மாலபே பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 87 வயதுடைய ஆண் ஒருவர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 01 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, இதயநோய் மற்றும் சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

07. கந்தளாய் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 56 வயதுடைய ஆண் ஒருவர் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் வெலிகந்த விசேட சிகிச்சை நிலையத்திற்கு மாற்றி அனுப்பபப்ட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 02 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்று மற்றும் கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

08. வரகாமுர பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 53 வயதுடைய ஆண் ஒருவர்  கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் கட்டுக்கஸ்தோட்டை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப் பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 02 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிபப்pடப்பட்டுள்ளது. 

09. பண்டாரகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 78 வயதுடைய ஆண் ஒருவர் 2021 ஏப்ரல் 30 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 மார்புத் தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X