2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அதிரடி அறிவிப்புகள் வெளியாகின

Freelancer   / 2021 ஜூலை 10 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன வெளியிட்ட புதிய சுற்றுநிரூபமொன்றின் ஊடாக இவை அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி மூடப்பட்டிருந்த வணக்கத்தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

திருமண நிகழ்வுகளை நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபத்தில் 25 சதவீத எண்ணிக்கையிலானோருடன் அல்லது அதிகபட்சமாக 150 பேருடன் திருமணங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூட்டங்களை 50 பேருடன் நடத்துவதற்கு அனுமதி.

கொரோனா தொற்று இல்லாத திடீரென ஏற்படும் மரணங்களின், மரண சடங்கிற்கு 50 பேர் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவதுடன், 24 மணித்தியாலங்களுக்கு சடலத்தை அடக்கம் செய்யவும் அனுமதி.

சினிமா, அருங்காட்சியகம் 50 வீதமான இட ஒதுக்கீடுடன் திறப்பதற்கு அனுமதி.

கடுமையான சுகாதார நடைமுறைகளுடன், அனைத்து ஹோட்டல்களையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X