S.Renuka / 2026 பெப்ரவரி 15 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பன்முகத்தன்மை கொண்ட எமது சமூகத்தில், சுயநலமற்ற சேவை, கருணை மற்றும் ஒற்றுமையின் மூலம் சவால்களை முறியடிக்க முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும், இருளை நீக்கி ஒளியையும், அறியாமையை நீக்கி ஞானத்தை வழங்கும் ஒரு புனித நாளாக மகா சிவராத்திரி போற்றப்படுகிறது.
இது ஆன்மீக ஒழுக்கம், தியானம் மற்றும் மன அமைதிக்கான ஒரு உன்னத தருணமாகும்.
பன்முகத்தன்மை கொண்ட எமது சமூகத்தில், சுயநலமற்ற சேவை, கருணை மற்றும் ஒற்றுமையின் மூலம் சவால்களை முறியடிக்க முடியும் என்பதை இவ்விழா நமக்கு நினைவூட்டுகிறது.
பக்தர்கள் இந்த இரவை பிரார்த்தனையிலும் தியானத்திலும் கழிக்கும் வேளையில், நமது நாடு அமைதியும் செழிப்பும் மிக்கதாக மாற அந்த இறைவனைப் பிரார்த்திப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
சிவபெருமானின் அருளால் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அமைதியும், ஆரோக்கியமும், ஆன்மீக ஞானமும் பெருகட்டும்.
இலங்கை வாழ் மற்றும் உலகெங்கிலும் வாழும் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் தமது இனிய மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
13 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
33 minute ago
1 hours ago