Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2019 நவம்பர் 29 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கான இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ வியத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை, புதுடில்லியில் இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது, ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், வெளிநாட்டுக்கான முதல் விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டமைக்காக, ஜனாதிபதிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
அயல்நாடு என்ற வகையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் நட்புணர்வு, மேலும் பலப்படுமென்று தெரிவித்த அமைச்சர், இலங்கையில் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு, இந்திர அரசாங்கம், தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குமென்றும், அவர் கூறினார்.
இதன்போது, இந்தியாவுக்கான அழைப்பை மேற்கொண்டமைக்கு, இந்தியப் பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய, இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் பலப்பட வேண்டுமென்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் அவர்களையும் ஜனாதிபதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .