Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 02 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ்காரன் பொண்டாட்டியா..? இல்ல, டிரைவர் பொண்டாட்டியா..? எது நல்லா இருக்கு..? என்ற யோசனையில் பொலிஸ்காரன் பொண்டாட்டி தான் நல்லா இருக்கிறது என முடிவு எடுத்து பத்து வருட காதலை குழி தோண்டி புதைத்து விட்டு தன்னுடைய காதலனை வார்த்தைகளால் புண்படுத்தி அந்த காதலனை தவறான முடிவு எடுக்க வைத்து தற்போது அந்த காதலனின் குடும்பத்தை நிர்கதியாக நிற்க வைத்து இருக்கிறாள் சங்கீதா என்ற ஒரு கொடூர அரக்கி
10 ஆண்டுகளாக காதலித்துக் கொண்டிருந்த காதலனை கழட்டி விட்டுவிட்டு வசதிக்காகவும், அரசு அதிகாரி.. அதுவும் காவல் துறை அதிகாரியின் மனைவி என்ற பெயருக்காகவும் தன்னுடைய காதலை குழி தோண்டி புதைத்து.. காதலனை மிரட்டி.. மன்னிப்பே இல்லாத கொடுமையான பாவத்தை செய்திருக்கிறாள் சங்கீதா என்ற இளம் பெண். என்ன விஷயம் என்று விரிவாக பார்க்கலாம்.
மயிலாடுதுறை மாவட்டம், தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் (29) என்ற இளைஞர், குவைத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தவர், கடந்த ஆகஸ்ட் 29 அன்று தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
இவரது தற்கொலைக்கு, 10 ஆண்டுகளாக காதலித்து வந்த (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணின் நம்பிக்கைத் துரோகமும், வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) சூரியமூர்த்தியின் மிரட்டல்களும் காரணம் என புகார் எழுந்துள்ளது.
இருவரும் திருமணத்திற்கு தயாராகி, ஒரு வாரத்திற்கு முன்பு நிச்சயதார்த்தமும் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த புகாரை விசாரித்த எஸ்ஐ சூரியமூர்த்தி, சங்கீதாயுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. வண்டி தொலைந்தது தொடர்பாக பேசுவது போல் தொடங்கிய இந்த உரையாடல்கள், பின்னர் நட்பாகவும், பின்னர் காதலாகவும் மாறியதாக தெரிகிறது.
இதனால், சங்கீதா, சரத்குமாரை புறக்கணிக்க தொடங்கினார்.
மேலும், சரத்குமார் கொடுத்த பணத்தையும் நகைகளையும் திருப்பித் தர முடியாது எனவும், இந்தியாவிற்கு வந்தால் அவரது குடும்பத்தினர் மீது பொய் வழக்கு போடுவதாகவும் சூரியமூர்த்தி மிரட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கீதா, தான் சூரியமூர்த்தியுடன் தவறாக நடந்து கொண்டதாகவும், ஆனால் அதற்கு மேல் எதுவும் நடக்கவில்லை எனவும் கூறியதாக தோழி தெரிவித்தார். இருப்பினும், சரத்குமார் இதனை நம்ப மறுத்து, தனது 10 ஆண்டு காதல் உடைந்ததால் மனமுடைந்து, குவைத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
சங்கீதா, சரத்குமாரை ஏமாற்றி 15 பவுன் நகையும், 2 லட்சம் பணமும் பெற்றதாகவும், எஸ்ஐ சூரியமூர்த்தி மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து, சூரியமூர்த்தி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சங்கீதாயின் டூவீலர் தொலைந்ததாக தொடங்கிய இந்த விவகாரத்தில், அந்த வண்டி கிடைத்ததா, கண்டுபிடிக்கப்பட்டதா என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது .
இந்த சம்பவம், காதல், நம்பிக்கை துரோகம், மிரட்டல் மற்றும் தற்கொலை என பல திருப்பங்களுடன் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரத்குமாரின் தற்கொலைக்கு சங்கீதாயும், எஸ்ஐ சூரியமூர்த்தியும் முழு பொறுப்பு என குற்றம்சாட்டி, அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரத்குமாரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .