Freelancer / 2026 பெப்ரவரி 07 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (08) முற்பகல் முதல் 22 மணிநேர நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாளை (08) காலை 6.00 மணி முதல் மறுநாள் (09) அதிகாலை 4.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக அச்சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, அஸ்கிரிய (மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி), வேகிரிய, பல்லேமுல்ல (புதிய மற்றும் பழைய), யடிஹலகல, கொண்டதெனிய, ரஜபிஹில்ல சேவை நீர்த்தேக்கம், மெதவல (பழைய) சேவை நீர்த்தேக்கம் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
அதேபோல், கஹவத்த, குருகொட, புலுகொஹதென்ன, கிராகடுவ, கஹல்ல, தெலம்புகஹவத்த, நுகவெல, பலனகல, மெதவல (புதிய) சேவை நீர்த்தேக்கம், கலகெதர மற்றும் மாவத்தகம ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
நீர் விநியோகம் தடைப்படுவதால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. R
39 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
2 hours ago