Editorial / 2025 செப்டெம்பர் 02 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் அறநெறிப் பாடசாலை கல்விக்காக, பிரத்தியேக வகுப்புகளை மாத்தறை நகரில் தடை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்,
முதலாம் ஆண்டு முதல் க.பொ.த. சாதாரண தரம் வரையிலான வகுப்புகளுக்கான பிரத்தியேக வகுப்புகள், ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் தடை செய்யப்படும் இந்த நடவடிக்கையை செயல்படுத்துமாறு மாத்தறை நகரசபைக்கு அமைச்சர் பணித்தார்.
க.பொ.த. உயர்தரத்துக்கு மேலதிக வகுப்புகளை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் தடை செய்வது நடைமுறைக்கு ஏற்றதல்ல என்றும், இது குறித்து மேலும் விவாதங்கள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
குறிப்பாக அறநெறிப் பாடசாலை கல்வி இல்லாததால், குழந்தைகள் வழிதவறிச் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது என்றும், எனவே ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் அறநெறிப் பாடசாலைக்கு குழந்தைகளை அனுப்புவது முக்கியம் என்றும் அரச அதிகாரிகள் தெரிவித்தனர்.
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
1 hours ago