Freelancer / 2021 ஜூலை 03 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்டா என அழைக்கப்படும் பயங்கரமான இந்திய மாறுபாட்டு வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு கொரோனா நோயாளி வெல்லம்பிட்டியவில் கிட்டம்பஹுவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த வைரஸால் பாதிக்கப்பட்ட 38 வயதான ஆண் நோயாளி பொரளையில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகிறார் என்று அப்பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.
"தொழிற்சாலையில் செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னரே அந்த நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
"நாங்கள் தற்போது பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்புகளை பேணியோரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.
அந்த பகுதியில் இருந்து வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
டெல்டா மாறுபாடு முதன்முதலில் தெமட்டகொட பகுதியில் கண்டறியப்பட்டது, மற்றொரு நோயாளி இதேபோன்ற தொற்றுநோயுடன் கஹதுடுவவில் கண்டறியப்பட்டார்.
மேலும், டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் COVID-19 நோயாளி, மதிவெல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இதையடுத்து தற்போது வெல்லம்பிட்டியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். R
9 minute ago
11 minute ago
30 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
30 minute ago
31 minute ago