2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு

Editorial   / 2019 ஒக்டோபர் 14 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சகல பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று (14) முதல் வழமை போன்று இடம்பெறவுள்ளதாக  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார்.

 அந்தந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இதற்குத் தேவையான திட்டத்தைத் தயார் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக தொழில்சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக சுமார் ஒரு மாத காலம் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தன.

இந்த நிலையில், கடந்த வருடத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களைஉள்வாங்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .