2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

மதுவுக்குப் பணம் தராத தாயைக் கொன்ற மகன் கைது

Editorial   / 2026 ஏப்ரல் 18 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராஜா சரவணன் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபாய் பணம் தராத தாயை, அவரது 19 வயது மகன் தள்ளி வீழ்த்தியதில் அவர் உயிரிழந்த துயரச் சம்பவம் மட்டக்களப்பு, சித்தாண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை (17) மாலை இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலை மேற்கொண்ட மகனைச் சந்திவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர். சித்தாண்டி 4-ஆம் பிரிவு, பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய குமாரசாமி வசந்தா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: நேற்று மாலை 6:00 மணியளவில், குறித்த இளைஞன் தனது தாயிடம் மதுபானம் அருந்துவதற்காக ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். தாயார் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த மகன், தாயாரைப் பிடித்துத் தள்ளியுள்ளார். இதில் நிலைதடுமாறித் தரையில் விழுந்த தாயாரின் தலை பலமாக மோதியதில், அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, தாக்குதலை நடத்திய இளைஞன் அங்கிருந்து தப்பியோடியதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் தலைமறைவாகியிருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சந்திவெளி பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .