Editorial / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு நெல் வயலில் சட்டவிரோதமாக விரிக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி இரண்டு பேர் இறந்த சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் பேரில் உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவில் உள்ள அம்பா கஹா சந்திக்கு அருகிலுள்ள வயலில் இந்த சம்பவம், செவ்வாய்க்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது.
இறந்தவர்கள் உரகஸ்மன்ஹந்திய பகுதியைச் சேர்ந்தவர்கள், 46 மற்றும் 39 வயதுடையவர்கள் ஆவர்,
அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பிகளைப் பொருத்தியதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
18 minute ago
19 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
19 minute ago
31 minute ago