Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kamal / 2019 நவம்பர் 30 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர இலங்கை்ககு மிக முக்கியமானவர் எனத் தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பியும் பேராசிரியருமான ஆசு.மாரசிங்க, ஷானி அபேசேகரவே இலங்கையின் 'ஷேர்லக் ஹோம்ஸ்' எனவும் பாராட்டினார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், அவ்வாறான ஒருவருக்கு அவரது தரத்துக்கு பொருத்தமற்ற பதவிக்கு இடமாற்றம் செய்யப்படுவது வேடிக்கையானதென தெரிவித்த அவர், சுயாதீனமான பொலிஸ் ஆணைக்குழு இயங்ககூடிய இயலுமை இருக்குமாயின் இந்த நிலைமை வராதெனவும் தெரிவித்தார்.
அதேபோல், ஷானி அபேசேகர, நிஷாந்த சில்வா போன்ற அதிகாரிகளை கைது செய்யுமாறு கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லையென தெரிவித்த அவர், அவர்கள் தவறு செய்திருந்தால் முதலில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தயாரிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அது குறித்து பேச எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர், சில தனியார் ஊடகங்களும் ஷானி அபேசேகர போன்றவர்களை கைது செய்யும் வகையிலான அழுத்தம் பிரயோகிகப்படுவதாகவும் சாடினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago