2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருமலையிலிருந்து தென்னமரவடி கிராமத்திற்கு நேரடி பஸ் சேவை ஆரம்பம்

Super User   / 2012 மே 23 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


மீளக்குடியமர்வு இடம்பெறும் தென்னமரவடி கிராமத்திற்கு திருமலையிலிருந்து நேரடி பஸ்சேவை இன்று புதன்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தின் வடக்கு எல்லை கிராமமான இக்கிராமத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டு வரும் மக்களின் நன்மை கருதியே திருகோணமலை நகரிலிருந்து நேரடி பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பஸ் சேவையினை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்  திருகோணமலை அருள்மிகு ஆலடி பிள்ளையார் கோயில் முன்றலிலிருந்து அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X