2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரே கிழக்கு முதலமைச்சராக வர வேண்டும்: அதாவுல்லா

Super User   / 2012 மே 28 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)


கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரே கிழக்கு முதலமைச்சராக வர வேண்டும் என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

அத்துடன் ஏம்மை அறிந்தவரே எம்மை ஆள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். கிண்ணியா பிரதேசத்தில் அண்மையில் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண அறிவியல் கண்காட்சியில் வெற்றியீட் பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா கடந்த சனிக்கிழமை கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் அதாவுல்லா தொடர்ந்தும் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"எங்கள் கிழக்கு மாகாணத்திற்கு எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் இல்லாமல் சியமலவாண்டுவயில் இருந்த ஒருவரை கொண்டு வந்து எங்கள் மாகாணத்தில் உள்ள பாண்டித்துவத்தை பற்றி பேச முடியுமா வாக்களிக்க சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார்.

அப்படியென்னறால் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். எவராக இருந்தாலும் கிழக்கு மாகாணம் மற்றுமொருவருக்கு பறிகொடுப்பதை நாங்கள் ஒரு போதும் விரும்பமாட்டோம்.

எப்பொழுதும் அரசியலில் நிதானம் மற்றும் நியாயம் ஆகியன வேண்டும். மர்ஹூம் அமைச்சர் அஷ்ரப் 2012ஆம் ஆண்டில் இவ்வாறான தொரு கனவு கண்டார். ஆனால், அவர் ஒரு குறிகிய வட்டத்திற்குள் நின்று கிழக்கில் மாகாணத்தில் 2012ஆம் ஆண்டு ஒரு முஸ்லிம் முதலமைச்சர் பற்றி பேசினார் என்றால் எவ்வளவு வெட்கத்தனமாக இருக்கும். நாங்கள் ஒருபோதும் அப்படி சொல்லமாட்டோம. எதையும் பேசும் போது கவனமாகவே பேசுவோம்" என்றார்.

கிழக்கு மாகாண தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.பாயிஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரே கிழக்கு முதலமைச்சராக வர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொது செயலாளரும் கல்முனை பிரதி மேயருமான நிசாம் காரியப்பர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








You May Also Like

  Comments - 0

  • aj Monday, 28 May 2012 09:13 AM

    யாருக்கு சொல்லுறார்?

    Reply : 0       0

    Niyas Monday, 28 May 2012 09:23 AM

    தம்புள்ள பள்ளிவாயல் ஆக்கிரமிப்ப பற்றி அமைச்சர் வாய திறக்காதது ஏனோ? சிலவேளை அது கிழக்கு மாகாணத்திற்கு அப்பால் இருக்கிறதனாலோ என்னமோ?

    Reply : 0       0

    sakeena nelugollakad Monday, 28 May 2012 10:08 AM

    பயம்னா இப்படி இருக்க வேண்டும்.

    Reply : 0       0

    imran Monday, 28 May 2012 10:40 AM

    நல்ல வேல அக்கரப்பத்தை சேர்ந்தவர்தான் வரவேன்டும் என்று கூறல்ல.

    Reply : 0       0

    razeek Monday, 28 May 2012 11:36 AM

    நல்லாத்தான் கனவு காண்றார். பிரதேச வாதம் போய் இப்ப மாகாண வாதம் வந்திருக்கு. அட்டாளைச்சேனையை தாண்டாத குதிரையை திருக்கோணமலை வரயும் ஓடும் எண்டு கணா கான்றார்.

    Reply : 0       0

    aroosh m.m.m Monday, 28 May 2012 11:44 AM

    அப்பாடி இன்னும் இலங்கையில் தான் உள்ளார் சந்தோஷம்.

    Reply : 0       0

    meenavan Monday, 28 May 2012 12:51 PM

    கிழக்கு மாகாணம் மற்றொருவருக்கு பறிபோக கூடாது என மறைமுகமாக சுட்டுவது உங்களது அமைச்சரவை நண்பர் நீதி அமைச்சரைதானே? ஏன் முடிந்தால் நீங்கள் அனைவரும் (தமிழ்+முஸ்லிம் எம்.பி.கள்)இணைந்து அம்பாறைக்கு ஒரு தமிழ் பேசும் சிறுபான்மை அரச அதிபரை நியமியுங்கள்........?

    Reply : 0       0

    kiyas Monday, 28 May 2012 02:50 PM

    யார் என்றாலும் வரலாம்.

    Reply : 0       0

    suresh Monday, 28 May 2012 06:59 PM

    நல்லவங்க வந்தா சரி

    Reply : 0       0

    ramesh Tuesday, 29 May 2012 02:44 AM

    ஏன் இதுக்கை தமிழரை இழுக்கிறார்?

    Reply : 0       0

    siraj Tuesday, 29 May 2012 03:48 AM

    ஹி ஹி ஹி நம்ம அதாவுல்லா அமைச்சர் பேசிட்டாரு. இனிமேல் எல்லா சரியாக நடக்கும் என எனண்ணிக் கொள்ளலாம்.

    Reply : 0       0

    careem Tuesday, 29 May 2012 04:35 AM

    ஒரு அரசியல்வாதியாக நீங்கள் சரியாகலாம். ஆனால், ஒரு மனிதனாக நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்பதை மனதை ஆழமாக பதியவைதுக் கொள்ளுங்கள் !!!

    Reply : 0       0

    friend Tuesday, 29 May 2012 05:34 AM

    ஒரு முஸ்லிம் அரசியல்வாதியாக இருந்து ஒரு ஊரை கட்டி எழுப்பியவர்களில் அமைசர்களான அஷ்ரஃப் - கல்முனை , ஹமீட் - அக்குருனை , அதாஉல்லாஹ் - அக்கரைபற்று, ஹிஸ்புல்லாஹ் - காத்தான்குடி, அமீர் அலி - வாழைச்சேனை, ரிசாட் - மன்னர் . இவர்ககளை தவிர யாரும், சொந்த ஊருக்காவது சேவை செய்யவில்லை.... ஆகவே, நன்றி மறந்து விடாதீர்கள்.

    Reply : 0       0

    S.Sinasudeen Ax Tuesday, 29 May 2012 05:45 AM

    கிழக்கு மாகாணம் மற்றொருவருக்கு பறிபோக கூடாது என மறைமுகமாக சுட்டுவது சுயநலம். யார் என்றாலும் வரலாம். அட்டாளைச்சேனையை தாண்டாத குதிரையை திருகோணமலை வரயும் ஓடும் எண்டு கணா கான்றார்.

    Reply : 0       0

    Amuthan muthur Wednesday, 30 May 2012 06:05 AM

    முடியுமானால் உங்கள் கட்சியில் தனித்து போட்டியிட்டு உங்கள்
    செல்வாக்கை முதலில்காட்டவும்

    Reply : 0       0

    junaid Thursday, 31 May 2012 06:31 AM

    நிதானமான கருத்து

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X