Editorial / 2022 ஏப்ரல் 20 , பி.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.
இராகலை நகரில் அரசாங்கத்துக்கு எதிராக இன்று (20) மாலை டயர்கள் எரித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் இராகலை நகரம் டயர் புகையால் சூழ்ந்ததால் சந்திக்குச் சந்தி டயர்கள் எரியூட்டப்பட்டன.
“கோட்டா கோ ஹோம்” கோஷம் எழுப்பினர். நகரில் கடைகள் மூடப்பட்டுள்ளன. கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தது. மூன்று மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டம் மாலை 5.40 மணிவரை முன்னெடுக்கப்பட்டது.
போக்குவரத்தும் தடைப்பட்டது. இதனால் இராகலை நகரிலிருந்து வலப்பனை, உடப்புஸ்ஸலாவை போன்ற தூரப் பிரதேசங்களுக்கு செல்வோர் பாரிய போக்குவரத்து அசௌகரிகங்களுக்கு முகம் கொடுத்தனர். ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தன் பின்னர் பஸ்களில் ஏறி வீடுகளுக்கு திரும்பினர்.

3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago