Princiya Dixci / 2022 மே 03 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த திடல் மைதான பெருநாள் தொழுகை, இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் இன்று (03) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பெருநாள் தொழுகை, காத்தான்குடி கடற்கரையோரம் சுமார் 5,000 க்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்களின் பங்குபற்றலும் இடம்பெற்றது.
திருகோணமலை, மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றதுடன், கந்தளாய் பிரதேசத்திலும் நோன்பு பெருநாள் தொழுகைகள் அமைதியான முறையில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, இறக்காமம், பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சாய்ந்தமருது, சம்மாந்துறை, மருதமுனை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் திறந்தவெளிகளிலும், மஸ்ஜித்துக்களிலும் நோன்புப் பெருநாள் தொழுகைகள் நடைபெற்றன.
இதன் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் கலந்துகொண்டதோடு,பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.






2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago