2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

சந்திப்பு…

Editorial   / 2024 செப்டெம்பர் 03 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு ஆய்வு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு அகாடமியின் பணியாளர் பாடநெறியை பயிலும் மாணவர் உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்தவை பெரேரா கடற்படை தலைமையகத்தில் செப்டம்பர் 02 சந்தித்தனர்.

இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியின் 64 வது பணியாளர் படிப்பை படிக்கும் 19 மாணவர் அதிகாரிகள் இந்த ஆய்வு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றனர், மேலும் குழுவிற்கு இணை செயலாளர்   ஸ்ரீ விஜய் நெஹ்ரா தலைமை தாங்குகிறார்.

இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்து, சுமூகமான சந்திப்பில் ஈடுபட்ட இந்தக் குழுவினர், கடற்படைத் தளபதி மற்றும் இந்தியத் தூதுக் குழுவின் தலைவருக்கு இடையில் நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

மேலும், இந்திய தேசிய பாதுகாப்பு அகாடமியின் பிரதிநிதிகள் இலங்கை கடற்படையின் பங்கு பற்றிய விரிவுரையில் கலந்து கொண்டதுடன், அந்த சந்தர்ப்பங்களில், பணிப்பாளர் நாயகம் நடவடிக்கை ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ், கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரியவின் கடற்படை உதவியாளர் மற்றும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் எம் ஆனந்தும் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X