Freelancer / 2022 மார்ச் 22 , பி.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கான ஊடக விருது வழங்கும் விழாவில், சிறந்த கேலிச்சித்திரம், சிறந்த பக்கவடிவமைப்பு மற்றும் சிறந்த வணிக கட்டுரைக்கான விருதுகளை தமிழ்மிரர் பத்திரிகை பெற்றுக்கொண்டது.
விருது வழங்கும் நிகழ்வு, கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று (22) பிற்பகல் இடம்பெற்றது.
தமிழ்மிரர் பத்திரிகையின் வணிக ஆசிரியர் எஸ்.சேகர் சிறந்த வணிகக் கட்டுரையாளர் (தமிழ்) விருதையும் கேலிச்சித்திரக் கலைஞர் நாமல் அமரசிங்க, சிறந்த கேலிச்சித்திரம் (தமிழ்) விருதையும், தமிழ்மிரர் பக்க வடிவமைப்பு குழுவின் முகாமையாளர் தாரக முத்துக்குமார, சிறந்த பக்கவடிவமைப்பு (தமிழ்) விருதையும் பெற்றுக்கொண்டனர்.
(படங்கள் - பிரதீப் தில்ருக்ஷண)


9 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
19 Apr 2026